தமிழகத்தில் கொரோனா...#2 - சிறு தொழில் முனைவோரின் பாதிப்பு: தோல் பொருள் தயாரிக்கும் துறை
இந்தியாவில் ஏறத்தாழ 44 லட்சம் தொழிலாளர்கள் கொண்டு மிகப்பெரிய உற்பத்தி துறை தோல் பதனிடுதல், அதனைக்கொண்டு பொருட்கள் தயாரித்தல் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள். தமிழகம் இந்தியாவில் தோல் சார்ந்த தொழில்களில் முதலிடம் வகிக்கின்றது. இங்கு அந்த துறையை சார்ந்த தொழில்களும், தொழிலாளர்களும் மிக அதிகம்.
இந்த நேர்காணலில் ஒரு சிறு (MSME) தோல் பொருள் தயாரிக்கும் (40 பேரை வேலைக்கு அமர்த்தும் ஒரு தயாரிப்பு நிறுவனர் மற்றும் அதன் தலைவர்) திரு. ராஜாராம் அவர்களுடன் இந்த துறை, மற்றும் கொரோனா வைரஸ் மூலமாக இந்த துறைக்கு ஏபட்டுள்ள நஷ்டம் குறித்து உரையாடுகிறோம்.